February 29, 2012

ஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே வலைச்சரப்பணி முடிந்து மீண்டுமொரு பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகி விட்டது. ஆங்கிலம் தெரிந்திருப்பது உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையும் தரும். எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. சமுதாயாத்தில் பெரும்பாலும் யாருடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கில மொழி அத்தியாவசியமாக விட்டது. குறிப்பாக, வேலைக்கான நேர்காணலில் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் திறமை இருந்தும், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் குறுகிப் போகின்றனர்.அந்த ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள எனக்கு தெரிந்த சில விஷயங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.பார்த்து படித்து விட்டு தங்களது எண்ணங்களை பகிர்ந்து விட்டுச் செல்லவும்

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்கண்டவற்றை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... மாற்றம் உங்களைத்தேடி வரும்

 • ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் படிக்க முடியாது... போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.
 • தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
 • ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
 • நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.
 • தவறாகப் பேசு விடுவோமோ ? மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோமோ ? போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

 • ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள என்.டி.டி.வி போன்ற இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.
 • தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.
 • எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
 • ‘டிக்ஸ்னரி’ (ஆங்கில அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
 • ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
 • டைரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் என்பது கற்க முடியாத மொழி அல்லவே.


நன்றி நண்பர்களே டிப்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

19 Responses to “ஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்”

பழனி.கந்தசாமி said...
Feb 29, 2012, 7:45:00 AM

ஆங்கில அறிவை ரிப்பேர் செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.


சம்பத்குமார் said...
Feb 29, 2012, 8:00:00 AM

@ பழனி.கந்தசாமி said...

//ஆங்கில அறிவை ரிப்பேர் செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்களேன். //

ஹா ஹா ஹா

அதுக்கு என்ன ஐயா அவர்களே

பதிவு எழுதிவிட்டால் போகுது


Jaleela Kamal said...
Feb 29, 2012, 8:30:00 AM

மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க/
அப்படி சின்ன சின்ன பாடமும் கற்பித்தால் நல்ல இருக்கும்


இராஜராஜேஸ்வரி said...
Feb 29, 2012, 8:32:00 AM

அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் என்பது கற்க முடியாத மொழி அல்லவே.

பயனுள்ள டிப்ஸ் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..


கோவை மு.சரளா said...
Feb 29, 2012, 9:28:00 AM

பயனுள்ள டிப்ஸ் சம்பத் இன்னும் கூட ஆங்கிலத்தில் பயிலும் அடிப்படை முறைகளை குறிப்பிட்டால் ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு நீங்கள் ஆசானாகிவிடுவீர்கள் நன்றி


கோகுல் said...
Feb 29, 2012, 9:32:00 AM

குட்மார்னிங் சார்.இங்கிலிஸ் தானா வந்துடாது நமது முயற்சியில்லாம னு தெளிவா உணர்த்துகின்றன உங்கள் டிப்ஸ்.


Vijayakumar .A said...
Feb 29, 2012, 9:42:00 AM

Super Brother


தங்கம் பழனி said...
Feb 29, 2012, 10:00:00 AM

எந்த மொழியாயினும் கற்றுக்கொள்ளக்கூடிய உறுதியான மனநிலை இருந்தால் நிச்சயம் வெற்றிப் பெறலாம்.

தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவரும், படிக்காத மேதை,கிங்மேக்கர் என்று புகழப்படும் காமராஜர் கூட தன்முனைப்பால் ஆங்கிலம் கற்று பேசவும் கற்றுக்கொண்டார்.

எனவே படித்த நாம் ஏன் கற்க முடியாது..??

ஒவ்வொரு குறிப்பும் அருமை..ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள நம்பிக்கைத் தரும் பதிவு!!

பகிர்வுக்கு நன்றி சம்பத்குமார்..!!


Lakshmi said...
Feb 29, 2012, 10:39:00 AM

மிகவும் பயனுள்ள டிப்ஸ் நன்றி


RAMVI said...
Feb 29, 2012, 10:42:00 AM

எந்த மொழியானாலும் உறுதி இருந்தால் சரியாக கற்றுக்கொண்டுவிடலாம். அருமையான டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி,சம்பத்குமார்.


athira said...
Feb 29, 2012, 11:51:00 AM

நல்ல தகவல்கள். அழகான ரிப்ஸ்ஸ்ஸ். எந்த மொழியாயினும் அதற்கு ஊக்கமும் ஆர்வமும் இருக்கவேண்டும்.


guna thamizh said...
Feb 29, 2012, 1:05:00 PM

தேவையான பகிர்வு


விஜயன் said...
Feb 29, 2012, 3:25:00 PM

பயனுள்ள பதிவு, பயிற்சி + முயற்சி = வெற்றி


வரலாற்று சுவடுகள் said...
Feb 29, 2012, 7:50:00 PM

நல்ல டிப்ஸ் நண்பரே .., பகிர்வுக்கு நன்றி


திண்டுக்கல் தனபாலன் said...
Mar 2, 2012, 2:21:00 PM

சிறப்பான பதிவு !


விக்கியுலகம் said...
Mar 2, 2012, 9:35:00 PM

நன்றிங்க்!


Arun said...
May 25, 2012, 6:11:00 PM

To learn Spoken English from your home, visit: www.facebook.com/RaynaAcademy


mohamed Rilwan said...
Sep 10, 2015, 2:22:00 AM

மிகவும் நன்றி . ஜெஸாக்கள்ளாஹஹைரா


Murugan said...
Jul 12, 2016, 4:36:00 PM

நன்றி


;