August 31, 2011

பணத்தின் மதிப்பை பயிற்றுவிக்கும் வழிகள்

வணக்கம் பெற்றோர்களே.பணத்தின் அருமையை நாம் உணர்ந்து இருக்கிறோம்.எனினும் நம் குழந்தைகளுக்கு அதைப்பற்றி உணர்த்தினால் தான் வருங்காலத்தில் நம் குழந்தைகள் வளமாக இருப்பார்கள்..இதை எப்படி செய்வது ? எங்கே கேட்பது என்று யோசிக்க வேண்டாம்.அவர்கள் ஆசைப்பட்டதை பரிசீலனை செய்து  வாங்கித்தரும்போதே உண்மையயை உணர்த்துங்கள். பணத்தின் அருமையை உணர்ந்திருப்பது என்பது செலவே செய்யாமல் சேமித்து மட்டும் வைப்பது என்று அர்த்தம் அல்ல. ஒரு பொருளை அதன் சரியான விலையில் வாங்குவது, ஆசைப் படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவற்றை மட்டும் வாங்குவது, திட்டமிட்டு செலவு செய்வது என்று இதற்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு போகலாம். குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை ஏன் உணர்த்த வேண்டி வருகிறது? விலை உயர்ந்த பல பொருட்களை சீக்கிரத்தில் உடைத்து விடுகிறார்கள். தொலைத்துவிடுகிறார்கள். அல்லது இப்பொழுதே வாங்கிக்கொடு என்று அடம் பிடிக்கிறார்கள். இல்லையா?

பணம் என்பது அப்பாவுக்கு மாதா மாதம் கிடைக்கிறது என்பது தெரிகிறதே, தவிர அதற்கு எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியவில்லை.உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால் அல்லது உங்களுக்கு ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது உங்கள் எத்தனை மணி நேர உழைப்பு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். விலை பத்தாயிரம் ரூபாய். உங்கள் மாத சம்பளமோ இருபதாயிரம்தான் என்றால் செல்போனின் மதிப்பு உங்கள் 15 நாள் உழைப்பு. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தால் அதை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்ற எண்ணம் வரும். இதை குழந்தைகளிடம் சொன்னால், வாங்கிக் கொடுத்த பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.  

மேலும் வளரும் விரைவில்..

நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.

மேலும் வாசிக்க

8/31/2011 by சம்பத்குமார் · 5

August 29, 2011

தாய்மை..


களங்கமற்ற

வளர்பிறையாய்

சீரோடு விளையும்

ஆரோகண அன்பு!


ரத்தத்தை

தித்திக்கும் அமுதாக்கும்

புடமிட்ட

உடல் தொழில்நுட்பம்!


புதிய வரவை

பதியமிட

ஆற்றலாய்

ஊற்றெடுக்கும் நாற்றாங்கால்!


உயர்ச்சி விரும்பிய

இயற்கையின்

தளராத முயற்சி பரிசளித்த

அளவற்ற ஆனந்தம்!


அன்பு

இன்புற்று அரசாளும்

ராஜ்ஜியத்தில்

வீட்சியற்ற ஆட்சிப்பீடம்!


இயற்கையின் மடியில்

உயர் பதவியின் விருதாய்

பணிவுடன்

அணிவிக்கப்பட்ட மணிமகுடம்!


இச்சையும்

கொச்சையும்

வித்திடும் வக்கிரங்கள்

மத்தியில்

தனித்துவ உணர்வாய்

புனிதம் புனைந்த மனிதம்!


தசை வளர்ச்சிக்கு

விசையூட்ட

தன் மூச்சையே தானமிடும்

ஆச்சரியமூட்டும் பாசம்!மண்ணில் திரியும்

எண்ணற்ற உயிர்களின்

சாயமான

தூய நேயத்தின்

நிச்சய உச்சநிலை!நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.

மேலும் வாசிக்க

8/29/2011 by சம்பத்குமார் · 4

August 28, 2011

ஆங்கிலப் பள்ளி..


கற்றை கற்றையாய் பணம் தரும்
பெற்றோர்களையும்
எல்லையின்றி படிக்க வைக்கும்
தொ(ல்)லை தூரக் கல்வி!
  
சும்மா இருக்கும்
அம்மாக்களை
மாலைநேர ஆசிரியர்களாக்கும்
வேலை வாய்ப்பு அலுவலகம்!கணம் தோறும்
பண அறுவடையில்
முன்னிலை வகிக்கும்
கான்கிரீட் வயல்!

நொறுக்குத் தீனிக்கு
செறுக்கு உண்டாக்கிய
பாலகர் வெறுக்கும்
பலகார பண்டகசாலை!

குட்டி வாகனத்தில்
சுட்டிக் குழந்தைகளை அடைத்து,
சுலபமாய் வலம்வர வைக்கும்
உலக மகா சர்க்கஸ்!

வாட்டும் சூரியன் வதைத்தாலும்
கோட்டு,சூட்டு,டை.ஷு மாட்டிவிட்டு
மழலைகளை அழ(கூட்டி) விடும்
குழந்தைகள் அழகு நிலையம்!

நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.

மேலும் வாசிக்க

8/28/2011 by சம்பத்குமார் · 8

நாளை நம் குழந்தைகளும் சாதிக்க...

வணக்கம் பெற்றோர்களே.என்ன உங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கான பரிசை கொடுத்துவிட்டீர்களா? வாருங்கள் இன்று நம் குழந்தைகளும் நாளைய உலகத்தில் சாதிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ கண்டிப்பில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்குஅதை செய்வியா? இதை செய்வியா?என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஆனால் தான் எதற்கும் லாயக்கில்லை என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது. அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்

மேலும் வாசிக்க

8/28/2011 by சம்பத்குமார் · 2

August 26, 2011

குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் தரவேண்டிய பரிசு.


இது இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பது அல்ல நண்பர்களே ! குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய தகுதிகள் என்ன எப்படி அதனை கற்றுத்தருவது.  ஓர் பார்வை.


அன்பு பெற்றோர்களே, இன்றைய சூழ்நிலையில்வருமானத்திற்கேற்ப செலவு செய்த காலம் போய் இந்த மாம் என்ன செலவு என்று முடிவு செய்துவிட்டு அதற்கான வருமானம் தேடி ஓடுகிற கால கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.அடிப்படை தேவைகள் வீடு, உடை, உணவு என்றிருந்த நிலை மாறி கார், கிரெடிட் கார்டு, மாடர்ன் செல்போன், கேபிள் டிவி என மாறி வருகிற உலகத்தில் பொருளில்லார்க்கு வாழ்க்கை இல்லை என்றே ஆகிவிட்டது. இதையெல்லாம் புரிந்து கொண்டு சில புதிய தகுதிகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்தாவிட்டால் நாம் நம் குழந்தைகளுக்கு தவறு இழைத்தவர்களாகிவிடுவோம்.

மேலும் வாசிக்க

8/26/2011 by சம்பத்குமார் · 7

August 24, 2011

தேவைதானா இந்த லோக்பால் சட்டம் ?

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.இந்தியா இவ்வாறிருக்கையில் இந்த லோக்பால் சட்டம் தேவைதானா ?
இன்றைய சூழ்நிலையில் ஊழல்களே மிகப்பெரிய கவலை தரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் உள்ளது. ஊழலை மேலும் வளர விடாமல் தடுக்க,  ஊழல் செய்வோரை கட்டுப்படுத்த கறாரான லோக்பால் சட்டத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.வெளி நாடுகளில் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் நம் நாட்டில் ஊழல்வாதிகள் தைரியமாக ஊர் சுற்றி வருகிறார்கள்
அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கம், இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இதை

மேலும் வாசிக்க

8/24/2011 by சம்பத்குமார் · 0

August 23, 2011

அடம் பிடிக்கும் குழந்தையை அரவணைக்க...


நம் ஒவ்வொருவரது வீட்டிலும் குழந்தைகள் நேரம் காலம் தெரியாமல் அடம்பிடிப்பார்கள்.அவர்களை எப்படி அரவணைப்பது என்பதை இன்று காண்போம்.பொதுவாக குழந்தைகள் எதற்காக அடம்பிடிக்கிறார்கள்?.இதன் காரணங்கள்...


1.நியாயமான தேவைக்காக..(பசியின் போது பாலுக்காக).
2.தன் விருப்பத்திற்காக (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).
3.அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது 
ஐஸ்கிரீமுக்காக அழுதல், கண்ணில் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அது கெட்டதாகவே இருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்).

இப்படி குழந்தைகள் எதற்கென்றே தெரியாமல் எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் பிரச்சினைக்கு சில தீர்வுகள்..

மேலும் வாசிக்க

8/23/2011 by சம்பத்குமார் · 6

August 22, 2011

குழந்தைகளின் நல்ல நண்பன் யார் ?

இந்த கேள்விக்கு விடை தேடினால் வரும் பதில் புத்தகம் என்பது யாரலும் மறுக்க முடியாத உண்மையே.அவர்களிடம் புத்தக வாசிப்பை கொண்டுவருவது எப்படி ? என்பது பற்றி பார்ப்போமா…

புத்தகம் என்றாலே இந்த காலத்துக் குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களே, அவர்களிடம் பாடப் புத்தகத்தை படிக்கச் சொல்வதே கஷ்டமாக இருக்கிறது. இதில் மற்ற புத்தகத்தை வேறா? என்று கேட்கிறீர்களா? பாடப்புத்தகம் தேர்வு சம்பந்தப் பட்டது. மனப்பாடம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால் மற்ற புத்தகங்கள் அப்படி இல்லையே. நல்ல பழக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்ற நம்பிக்கையோடும் கொஞ்சம் உற்சாகத்தோடும் முயற்சியை துவங்குங்கள்.

மேலும் வாசிக்க

8/22/2011 by சம்பத்குமார் · 4

August 21, 2011

உன்னால் முடியும் தம்பி.. தம்பி..

முயற்சி செய் இளைஞனே ! தோள் கொடுக்க தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.


இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்களேன்...மேலும் வாசிக்க

8/21/2011 by சம்பத்குமார் · 5

August 20, 2011

வாருங்கள் நண்பர்களே ! அடுத்த காந்தி அழைக்கிறார்...


 நாட்டில் ஊழல்வாதிகளை தண்டிக்க வழி செய்யும் சட்ட மசோதாவான "ஜன லோக்பால் மசோதாவை' தாக்கல் செய்ய வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் முதல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் சமூக சேவகர் அன்னா ஹசாரே. இவர் திடீரென ஊழலுக்கு எதிராக போராட்டத்தை துவங்கவில்லை, மாறாக 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் பல்வேறு ஊழல்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி, வெற்றியும் பெற்றிருக்கிறார். இவரது ஊழல் எதிர்ப்பு பேராட்டத்துக்கு நாடு முழுவதும் நாள்தோறும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இவரது சமூக பணிகளை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு "பத்ம பூஷன்' மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. மகாராஷ்டிர அரசு "கிரிஷி புஷானா விருது' வழங்கியது. காந்திகிராம பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
பெருமைப்படுத்தியது. கிசன் பாபுராய் ஹசாரே என்பது இவரின் முழுப்பெயர். 1937, ஜூன் 15ல் மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தின் ரிலேகான் சித்தி என்ற கிராமத்தில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு "பூ' விற்கும் வேலைக்கு சென்றார். அவசர காலத்தின் போது அதிகளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை இந்தியா தேர்வு செய்தது. 1962ல் 25 வயதில் இந்திய ராணுவத்தில் ஹசாரே சேர்ந்தார். அங்கு டிரைவராக பணியை துவக்கினார்.

மேலும் வாசிக்க

8/20/2011 by சம்பத்குமார் · 0

August 18, 2011

கிப்ட் வாங்கித் தரும் பெற்றோர்களே கவனிக்கவும் !

உங்களது வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் சரி அந்த வீட்டின் குழந்தைகள் அனைவரும் ஏதோ ஒரு நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் பதிலாக கொசுராக ஏதாவது வேண்டாத பொருளையோ அல்லது தேவையற்ற காரியங்களை செய்வதற்கோ லஞ்சமாக எதையாவது கேட்கிறார்கள்.இந்த பழக்கம் யாரால் எங்கிருந்து வருகிறது ?

குழந்தைகள்
தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வருகிறது.அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்கிறார்கள். ’நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் என ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கூறுகிறார்கள்.  குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு பெற்றோர்கள் ஏதாவது கிப்டாக தருவது மிக மேசமான பழக்கம். இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

8/18/2011 by சம்பத்குமார் · 2

August 17, 2011

காலை நேர டென்ஷனை களைவது எப்படி ?

பொழுது விடிந்ததுமே குழந்தைகளின் முதல் வேலை படுக்கையிலிருந்து எழ அடம் பிடிப்பதுதான். அப்பா (அம்மா) ப்ளீஸ் 10 நிமிடம் என எழுந்திருக்கும் நேரத்தை நீட்டித்தபடி இருப்பது. இன்னும் சிலர் பதிலே பேசாத மவுனச் சாமியார்களாய் ஆழ்ந்த நித்திரையில் இருந்து பெற்றோர்களின் டென்ஷனை இரண்டு மடங்காக்கி விடுவார்கள்.சிலர் அப்படியே எழுந்து விட்டாலும் படுக்கையில் உட்காந்தே தூங்குவது, இன்னுமா எழுந்திருக்கல என்ற சத்தம் வந்ததும் நடந்து கொண்டே தூங்குவது, என் பொறுமையை சோதிக்காதே என்று அறிவிப்பு வரும் வரை தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.இந்த காலைநேர டென்ஷன் களைவதற்கு என்ன வழி ?.  

மேலும் வாசிக்க

8/17/2011 by சம்பத்குமார் · 0

August 16, 2011

குழந்தை வளர்ப்பு : கேள்வி கேட்கும் குழந்தைகள்குழந்தைகள் கேள்வி கேட்பது எவ்வளவு நல்ல விஷயம்! அம்மா (பா) ஏன் வானம் நீலமா இருக்குஸ்விட்ச் போட்டதும் லைட் எப்படி எரியுது? ஏ.டி.எம்மில் எப்ப்டி பணம் வருகிறது? டி.வி எப்படி வேலை செய்கிறது ?... இப்படியெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டால் எந்த பெற்றோருக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும்.மேலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பெரும்பாலான கேள்விகள் அம்மா நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற?, அப்பா, நீ ஏன் கறுப்பா இருக்க?, ஏன் அந்த அண்ணாவும், அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க?...இது போன்று குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லை. எல்லாப் பருவத்திலும் அவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். மாற்றங்களை அவர்கள் பார்க்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் வருகின்றன. கேள்வி எழும் பருவத்தைப் பொறுத்து, அதற்கான பதிலை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு பெற்றோர்கள்தான்.

மேலும் வாசிக்க

8/16/2011 by சம்பத்குமார் · 0

August 12, 2011

குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை…தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழைந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. அவர்களுக்காக இதோ சில யோசனைகள்...

  • வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில், படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம்தான் முக்கியம்

மேலும் வாசிக்க

8/12/2011 by சம்பத்குமார் · 1

August 10, 2011

பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற...பெற்றோர்களின் வாழ்வில் பிரச்சினை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை. மனைவி அல்லது குழந்தையோடு பிரச்சினை, கல்வியறிவில்லை, உடல்நலம் இல்லை, குண்டாக இருக்கிறேன், கல்யாணம் ஆகவில்லை, சொந்த வீடு இல்லை, பணமில்லை, கார் இல்லை, அலுவலக பிரச்சினை என பிரச்சனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற சில யோசனைகள்.
  • ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. பிரச்சினைகள் எப்போதும் நிரந்தரமாக இருக்கப் போவது இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும்.
  • உலகத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் மட்டும் தான் எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறேன் என்று எண்ணாதீர்கள். பில்கேட்ஸ் முதல் பிச்சைக்காரர்கள் வரைக்கும் பிரச்சினை என்பது எல்லோரிடமும் தான் இருக்கிறது. 

மேலும் வாசிக்க

8/10/2011 by சம்பத்குமார் · 0

August 8, 2011

அதிர்ச்சி தகவல் : குழந்தை டிவி பார்த்துகொண்டே உள்ளதா ?

சமீபகாலமாக டி.வி.சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறது சமீபத்தைய கணக்கெடுப்பு ஒன்று.

நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு
அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

300
குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 20 சதவீதம் பேர் தற்போது தொப்பையுடன் உள்ளனர்.

இதுதவிர
10 சதவீத குழந்தைகளுக்கு தலைவலியும், 2 சதவீத குழந்தைகளுக்கு வலிப்பும் உள்ளது.

6
சதவீத குழந்தைகளுக்கு உடல் பலவீன நோய்களும் பாதித்திருப்பது தெரியவந்தது.

அதிக அளவில் டி.வி.பார்ப்பதால்
53 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் தாமதமாகவே தூங்கச் செல்கின்றனர்.

இதனால் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


டி.வி.பார்ப்பதால்
குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதாகவும், அவர்கள் அதிக அளவில் கோபம், எரிச்சல், அடைவதாகவும், 32 சதவீத குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

டி.வி.பார்க்கும் குழந்தைகள் வெளியில் சென்று
விளையாடுவதில்லை. இதனால் உடல் மற்றும் மன நலத்திற்கு தேவையான அத்தியாவசிய பயிற்சிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

அதிக அளவில்
டி.வி.பார்க்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்கு பேசும் மொழிகளில் தெளிவு இல்லாத நிலை உள்ளது. தாங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாகச் சொல்ல முடியாமல் திணறுகின்றனர்.

ஆகவே
, பெற்றோர்களே, இந்த ஆய்வு முடிவை பார்த்தாவது நீங்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்.அவர்களின் டிவி பார்க்கும் நேரத்தை கண்காணியுங்கள்.

டிவியே பார்க்க வேண்டாம் என்று சொல்லவரவில்லை.
அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், மன நலத்திற்கும் நன்மைகளை அள்ளித் தருகிற புத்தகங்களை படிக்க பழக்குங்கள். தினமும் செய்தித்தாள்களை வாங்கி படிக்கச் செய்யுங்கள்! இதன் மூலம் அவர்களது பொது அறிவு வளர்வதுடன் நல்ல சிந்தனையாளர்களாவும், பேச்சாளர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் மேதைகளாவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

இன்னும் வரும்.

நன்றி : இணையம்

மேலும் வாசிக்க

8/08/2011 by சம்பத்குமார் · 1

பொய் கூறும் குழந்தையை என்ன செய்வது..

குழந்தை ஏன் பொய் சொல்கிறது? பெரும்பாலும் பெற்றோர் மீது உள்ள பயத்தினால்தான். நீங்கள் திட்டுவீர்கள், அடிப்பீர்கள் என்று நினைத்துதான் பொய் சொல்கிறார்கள். குழந்தைகளிடம் உங்கள் அணுகுமுறையை மாற்றிப் பாருங்கள். குழந்தைகள் மீதுள்ள குற்றப் பார்வைதான் அவர்களைப் பொய் சொல்லத் துண்டுகிறது. பொய் சொல்வதுதான் பிற்காலத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் பொய் சொல்லத்தான் செய்கின்றன. அதற்கு தண்டனை தராமல்  அந்தப் பிரச்னைக்குத் தீர்வு தர முயற்சித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்கள்தான் ரோல் மாடல். தன் அப்பா, அம்மா செய்வதை அப்படியே செய்து பார்க்க நினைப்பார்கள் அப்படித்தான் பொய் சொல்வதையும் செய்கிறார்கள். குழந்தைகள் பொய் சொல்வதை நீங்கள் அறிந்துகொண்டால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். அந்த நேரத்தில், இனிமேல் நீ பொய் சொல்லுவியா? என்று மிரட்டினாலோ, அடித்தாலோ... அடுத்த முறையும் அவர்கள் பொய்தான் சொல்லுவார்கள்.


குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறேன் என நினைத்து ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கித் தருவது மிகவும் தவறான செயல். நீங்கள் குழந்தையின் மீது உள்ள அன்பினால்தான் இதைச் செய்கிறீர்கள். ஆனால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். குழந்தையின் பிறந்த நாளுக்கு 2000 ரூபாய்க்கு புது சைக்கிள் வாங்க நினைத்து கடைக்குப் போகிறீர்கள். ஆனால் கடையில் 3000 ரூபாய் சைக்கிள் அழகாக இருக்கிறது. அதை வாங்குகிறீர்கள். ஆனால் குழந்தையிடம், அப்பா(மா) கேட்டால் 2000 ரூபாய்னு சொல்லு பாப்பா என்று சொல்வோம். நீங்கள் சொல்வதைதான்  குழந்தை நம்மிடம் அடுத்தமுறையும் செய்ய பார்க்கிறது. குழந்தை செய்தவுடன் நமக்கு கோபம் வருகிறது.


குழந்தை எதையாவது கேட்கிறதா... ஒன்று அதை வாங்கிக் கொடுங்கள். அல்லது இல்லை என்று அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். குழந்தைகள் இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு போகும்போது ஸ்கூலுக்கு போக காசு வேண்டும் என அடம்பிடிப்பார்கள். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் குழந்தை அப்பாவின் சட்டைப் பையிலிருந்து காசு எடுக்கும். ஏன் காசு கேட்கிறது என யோசிக் வேண்டும். பிரச்னை தீர ஸ்கூலில் மற்ற குழந்தைகள் காசு கொண்டுவருகிறார்களா என்பதை விசாரித்து அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசுங்கள்.


அடுத்தது குழந்தைகள் அதிகம் வெளியே போக ஆசைப்படுவார்கள். அதற்குத் தடை விதிக்க வேண்டாம். நல்ல நண்பர்கள் வீட்டுக்குத் தேவை இருந்தால் மட்டுமே போக வேண்டும் என கட்டளை விதிக்க வேண்டாம்.. மறுத்தால் நான் கிளாஸ் ஒர்க் நோட் கேட்கப் போகிறேன் என்று பொய் சொல்லுவார்கள். அதைப் போல இந்த வயதில் போனில் பேச வேண்டும் என ஆசையும் இருக்கும். குழந்தைகளை விட்டுதான் பிடிக்க வேண்டும்.


தவறு செய்வது இயல்புதான். அது அடுத்த முறை தொடராமல் தடுக்க வேண்டும் இதுதான் பெற்றோரின் கடமையும் கற்றுக்கொள்ள வேண்டிய கலையும் கூட.


நல்ல பெற்றோர்களாக இருப்போம். நல்லபடியாக குழந்தைகளை வளர்ப்போம்.


இன்னும் கலைகள் வளரும்.

இன்றைய வள்ளுவரின் வாக்கு..

பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

மேலும் வாசிக்க

8/08/2011 by சம்பத்குமார் · 0

August 7, 2011

இன்றைய அரும்புகள் நாளையசமுதாயத்தின் நறுமலர்களாக....

கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை. இருப்பினும், குழந்தைகள் தங்கள் அடிப்படை உரிமையை இழந்து தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்து மீட்கப்படும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருவது கவலை அளிப்பதாக உள்ளது. குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ஆபத்தான தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை அறவே ஒழிக்க வேண்டும்

வறுமையும், கல்வியறிவின்மையுமே குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. இந் நிலையில் வறுமை தொடரும்வரை குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது சிரமமே என்று மத்திய அரசு அமைத்த குழு தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, வறுமை, கல்வியின்மையைப் போக்கும் திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டும். அப்போதுதான், இன்றைய அரும்புகள் நாளைய சமுதாயத்தின் சிறந்த மலர்களாக மணம் வீச முடியும்.

குழந்தைத் தொழிலாளர் முறை என்பது வெட்கப்பட வேண்டிய மற்றும் உடனடியாக ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுவர் சிறுமியர்கள் கடைகள், விடுதிகள், ஓட்டல்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி, கல்லுப்பட்டறை இன்ன பிற இடங்களில் பரவலாக வேலை செய்கின்றனர். அவர்களுடைய தொழில் என்பது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அவர்களது சம்பளம் என்பது பெற்றோருக்கு அவமானம். இச்சிரார்களை மீட்பதற்காக அரசாங்கம் மிகவும் மெனக்கெட்டு வழிவகைகளை ஏற்படுத்துகிறது. இத்தகு சிறுவர்களின் நிலையில் என்னால்  மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.நான் சிறு துளிதான் வாருங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இன்னும் கலைகள் வளரும்…

மேலும் வாசிக்க

8/07/2011 by சம்பத்குமார் · 0

;