July 31, 2011

கூச்சத்தை ஓரங்கட்டு...

கூச்சம் வளர்ச்சிக்குத் தடை. வாய்ப்புகளை இழப்பதற்கும். சரிவர பயன்படுத்தி முடியாமல் போவதற்கும் அதுவே காரணம். கூச்சம் உள்ளவர்களால் தங்கள் வாழ்வில் வெற்றி பெற முடியாது.

கூச்சம்  உள்ள குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில்லை. சிநேகிதர்கள் இருக்காது. இருந்தாலும் பொழுதுபோக்குகளில் ஈடுபாடு இருக்காது. வளரும் பருவத்தில் சமுகத்தில் கலந்து பழகாமல் ஒதுங்கியே இருப்பார்கள்.

குழந்தையின் கூச்ச சுபாவத்தை அகற்ற உளவியல் நிபுணரின் ஆலோசனை தேவைப்படும். பெற்றோர்களும் குழந்தையிடம் பரிவு காட்டி நடந்து கொள்ள வேண்டும்.

கூச்சமான குழந்தை சுயவிமர்சனம் செய்து கொள்ளும். அவனுடைய சுயமதிப்பீடும் மோசமாகவே இருக்கும். அவனிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.சின்னச்சின்ன பொறுப்புக்களைக் கொடுக்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்யலாம். பையனை ஊக்குவித்தால் உற்சாகம் பெறுவான். உற்சாகம் அவனைக் கலகலப்பான சுபாவம் உள்ளவனாக்கி  விடும்.

மேலும் வாசிக்க

7/31/2011 by சம்பத்குமார் · 1

தேச தந்தைகள் யார் ? யார் ?

தேச தந்தைகள் – பாகம் – 1
மாணவர்கள் தெரிந்து கொள்ள் வேண்டிய தேச தந்தைகள் 
 (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்)

1 இந்தியா மகாத்மா காந்திஜி
2 அயர்லேண்ட்  ஜேம்ஸ் கண்ட்
3 அர்ஜெண்டினா   பெட்ரோ-டி-மெண்டோஸா
4 அஜர்பைஸான்   நகோர்னோ-கராபக்
5 ஆப்கான் அமீர் அமானுல்லா
6 ஆஸ்திரிய  சார்லமேக்னே
7 ஆஸ்திரேலிய  சர் எட்மண்ட் பர்டன்
8 இத்தாலி கரிபால்டி
9 இந்தோனேசிய டாக்டர் சுகர்ணோ
10 இஸ்ரேல் டேவிட் பென் சூரியன்
11 ஈராக் ஃபெய்ஷல்
12 ஈரான் அல் அல்பெய்ஷீர்
13 எத்தியோப்பியா அடிஸ் அபாபா
14 ஐரிஷ் ஈமான் –டி –வலேரா
15 கம்போடியா நோரோடோம் சிஹானாக்
16 கனடா ஜாக்யுஸ் கார்டியர்
17 கஸகஸ்தான் நூர்சுல்தான் 
18 காங்கோ அபி ஃபுல்பர்ட் யூலு
19 கானா அமில்ஹர் ஹேப்ரல்
20 கியூபா தோமஸ் எஸ்ட்ரடா பால்மா
21 குரேஷியா  பிரான்ஜோ குட்ஜ்மான்
22 குவைத் அல் – குவாரிஸ்மி
23 கென்யா ஜோமோ கென்யட்டா
24 கொலம்பியா சைமன் பொலீவர்
25 சிலி பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
26 சீன டாக்டர் சன் –யாட் – சன்
27 சுலோவாக்யா    வாக்லோவ் ஹேவல்
28 நவீன எகிப்து கமால் அப்துல் நாஸர்
29 பங்களா  ஷேக் முஜிபுர் ரஹ்மான்
30 பல்கேரியா ஜியார்ஜ் டிமிட்ரோவ்
31 பழைய அல்பேனிய  ஸோகு
32 பஹ்ரைன்  அகமது இபின் –அல் –காலிபா
33 பாகிஸ்தான் முகமது அலி ஜின்னா
34 பிரான்ஸ் ஜியார்ஜ் கிளமென்ஸ்சியோவ்
35 பிரேசில் ஜோஸ் ஜா.சில்வா ஷேவியர்
36 பிஜி எபெல் ஜேன்ஸ்
37 பூட்டான் ஷாப்ட்ரங் க்வாங் நாம்கியால்
38 பெல்ஜிய  கிங் முன்றாம் லிப்போல்டு
39 பெனின் கூபர்ப் மெகா
40 பொலிவியா சைமன் பொலீவர்
41 போட்ஸ்வானா  செரட்ஸே காமா
42 மங்கோலியா செங்கிஸ்கான்
43 மலேசியா அதுல் ரெஹ்மான் டுங்கு
44 மாலத்தீவு லட்சுமண் பிரிடோஅகஸ்டின்
45 லிபியா` மாம்மெர் அபுமின்யர் கடாபி
46 லெபனான்  ஃபெனோ ஃபின்போ
47 ஜப்பான்  மினமோடோ யோரிடோமோ
48 ஜெர்மனி மெட்டர்னிக்
49 ஜோர்டான் சாலமன்
50 ஹைட்டிதீவு ஜீன் ஜாக்யுஸ் டெஸாலின்ஸ்


அடுத்த பாகம் விரைவில்...

நன்றியுடன்


சம்பத்குமார்.B
மேலும் வாசிக்க

7/31/2011 by சம்பத்குமார் · 0

குழந்தை விரும்பும் பெற்றோராக...


தன் மகன் நல்லவனாக வல்லவனாக வளர வேண்டும் என்பதுதான் இன்றைய எல்லா பெற்றோர்களின் பொது விருப்பம். ஆனால் அதற்கான சரியான சூழ்நிலையை மனநிலையை எத்தனை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள்.என்பதற்கான விடை திருப்திகரமானதாக இல்லை!

நீங்கள் அவங்களுக்கு என்னவெல்லாம் பண்ணிக் கொடுத்துள்ளீர்கள் என பட்டியல் போடாமல், நீங்க அவங்ககிட்ட எவ்வளவு தூரம் புரிதலுடன் நடந்து உள்ளீர்கள் என யோசித்துப் பாருங்கள்.

பெற்றோர் வகைகள்

 • பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் சரி சொல்லுதல்
 • பிள்ளைகளை தங்களின் விருப்பங்களுக்கு அடிபணிய வைத்தல்
 • பிள்ளைகளின் விருப்பத்துக்கும் இடம் தருதல்
 • ‘அதெல்லாம்  உனக்கு தெரியாது’ என்று ஒதுக்காமல், எல்லாவற்றிலும் பிள்ளைகளை முழுமையாக ஈடுபட வைத்து அவர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்
இதில் கடைசியாக இருப்பதுதான் பிள்ளைகளின் தன்னம்பிக்கையைவளர்த்து, அவர்களை தன்னிச்சையான அதே சமயம் சரியான முடிவெடுக்கும் மனிதர்களாக உருவாக்கும்!
இந்தகாலப் பிள்ளைகள் விரிம்புவது மரியாதைக்குரிய பெற்றோரை அல்ல ஃப்ரெண்ட்லியான பெற்றோரை. அப்படியிக்கும் பெற்றோர்களிடம்தான் அவர்க;ள் பயம் ,தயக்கங்கள் இன்றி தங்களின் பட்டாம்பூச்சி வயது நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்’

வீட்டுக்குப் புதிதாக நண்பர் தூரத்து உறவினர், தெரிந்தவர்கள் என்றுயாராவது ஒருவரை அம்மா அல்லது அப்பா அழைத்து வரும்போது அவர்களைப் பற்றியவிவரங்களை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். அவர்களில் 90சதவிகிதம் பேர் நல்லவர்களாக இருக்கலாம். மீதி 10 சதவிகிதத்தை பற்றி நமக்கு தெரியாதே! அப்படிப்பட்டவர்களால் சமயங்களில் விபரீதமாக ஏதாவது நடக்கும் போது….. அன்றைக்கு வந்தாரே என்று குழந்தைகள் ஈஸியாக அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இருக்கும். நடை உடையில் தவறான நபராக தெரிந்தால் ‘அந்த அங்கினை இனிமே வீட்டுக்கு வரச் சொல்லாதப்பா என்றுகூட தைரியமாக குழந்தைகள் சொல்வதற்கு வாய்ப்ப்பாகவும் இருக்கும். 
.

மேலும் வாசிக்க

7/31/2011 by சம்பத்குமார் · 0

July 29, 2011

நன்றி சொல்லுங்கள் நல்லதே நடக்கும்


நன்றியையும் பாராட்டையும் மனதில் நினைத்தால் மட்டும் போதாது. உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்.
நன்றி, பாராட்டு மற்றும் மதிப்பை உரியவருக்கு கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் திருப்பிக் கொடுப்பார்கள்.
நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள். உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்துபோகவோ கூடும்.
 • நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள்.
 • நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.
 • நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணுமுணுக்காதீர்கள்.
 • மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.
 • நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் பார்த்துச்சொல்லுங்கள்.
 • நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். நன்றிக்கு உரியவர் பார்க்கவும் கூடியவராவர்.
 •  நன்றி சொல்லும் போது அவர்களின் பெயரையும் சேர்த்துச் சொல்லுங்கள். தனிப்பட்ட தனியொருவருக்கானதாக இருக்கும்படி நன்றியைப் பெயருடன் சேர்த்துச் சொல்லுங்கள் .
 • நன்றி என்றுசொல்வதை விட நன்றி ராணி என்பது வித்தியாசமாகவும், கூடுதல் நெருக்கத்துடனும் இருக்கும்.
 • காலத்தைக் கணித்து நன்றி சொல்லுங்கள்.
 • உங்கள் பாராட்டை, நன்றியைக் கூற சரியான நேரத்தைப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.
 • சாதாரணமானவர்கள் வெளிப்படையாகத் தெரிபவற்றுக்கு மட்டும் நன்றி சொல்வார்கள். உயர்ந்தவர்கள் வெளிப்படையாகத் தெரியாத உதவிகளையும் அறிந்து நன்றி சொல்வார்கள்.
 • சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம்  உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.   மேலும் வாசிக்க

7/29/2011 by சம்பத்குமார் · 1

July 27, 2011

யாமிருக்க பயமேன் !


வளார்ந்த குழந்தைகள் தாங்கள் தவறு செய்துவிட்ட நிலையில் ‘இனியும் நம்மை அப்பா நேசிப்பாரா?’ என்று தமக்குள் கேட்டுக் கொள்வார்கள். எல்லாமே முடிந்துவிட்டதாய் எண்ணி மனம் உடைந்து போவார்கள். தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவர்களுக்குக் கூச்சமாகிவிடும். அந்நிலையில் அவருடைய மவுனத்தை கூட தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டணையாய் அவர்கள் கருத நேரிடும்.

பெற்றோர் தங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டும். ‘நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மறுபடியும் அந்த தவற்றை செய்யாமல் இருப்பதுதான் முக்கியம்’ என்று கூறுங்கள்.

‘எனக்கு உன் மீது வந்த  கோபம் அப்போதே மறைந்து விட்டது உன்னிடம் எனக்குள்ள அன்பு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்’ என்று பெற்றோர் குழந்தையிடம் தங்களுக்குள்ள நேசத்தை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது புன்னகையும். பிரியமான தட்டுதல்களும் அந்த வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும்.

கடுங்குளிரில் தேகத்தைக் காக்கும் கம்பளியைப் போல். அந்தப் பரிவு அவர்களுக்குள் கதகதப்பான உணர்வைத் தரும்.
  

மேலும் வாசிக்க

7/27/2011 by சம்பத்குமார் · 1

July 26, 2011

பேய்களை நம்பாதே... பிஞ்சிலே வெம்பாதே...


குழந்தைகள் அச்ச உணர்வுடன் இருப்பதில்லை, பெரியவர்களாகிய நாம்தான் இந்த உணர்வுகளை ஊட்டிக் கெடுத்து விடுகிறோம். “அங்கே போகாதே இங்கே போகாதே” என்றும்,பேய் வருகிறது, பூதம் வருகிறது,என்றும் எதை எதையோ கூறி இளமையிலேயே அச்ச உணர்வுகளை ஊட்டி ஊட்டிக் கெடுத்து விடுகிறோம்.

இருட்டைக் கண்டால் பயம் தெரு முனையிலுள்ள சிறிய  கோயிலுக்கு இரவில் செல்ல பயம். பூனையைக் கண்டால் பயம்,நாயைக் கண்டால் பயம் ஆக அனைத்தையுமே கண்டால் பயம் என்ற நிலைக்கு நமது அறியாமையால் அவர்களை கொண்டு வந்து விடுகிறோம்.  
உள்ளூர்க்காரனுக்குப் பேயைக் கண்டால் பயம்,அடுத்த ஊர்க்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம் என்பார்கள். 
இரவு நேரத்தில் குறிப்பிட்ட அந்தக் கோயிலில் பேய் நடமாடுவதாகக் கதை கட்டி விடுவார்கள். இதை சின்னஞ்சிறு வயதிலிருந்தே நம்பிக்கொண்டு இரவு நேரத்தில் தெரு முனையிலுள்ள கோயிலுக்குச் செல்ல  அஞ்சுவார்கள். வெளியூர்க்காரனுக்குக் குளத்தில் ஆழம் பற்றி தெரியாது. எனவே பயந்து பயந்துதான் தண்ணீரில் இறங்குவான்.

சின்னஞ்சிறு வயதில் குழந்தைக்கு சோறு ஊட்டும் அன்னை பயத்தையும் சேர்த்து ஊட்டி விடுகிறாள். சரியாகச் சாப்பிட்டா விட்டால் பூச்சாண்டி வந்து பிடித்து சென்று விடுவான் என்பாள்.  பயந்த வண்ணம் வேண்டா வெறுப்பாக அந்தச் சோற்று உருண்டையை விழுங்கும். இவ்விதமாக ஒவ்வொன்றையும்  பற்றி கூறிக்கூறி அச்ச உணர்வை ஊட்டி விடுகிறார்கள் .ஊட்டி ஊட்டி அவர்களை இறுதிவரை அச்சம் நிறைந்தவர்களாகவே ஆக்கி விடுகிறோம்.

எதையும் பிடித்து விளையாட வேண்டும் என்று ஆர்வமுள்ள குழந்தையிடம் அச்ச உண்ர்வுகளைக் காரணம் இல்லாமல் ஊட்டுவதினால் பூனையை தொடவும், கோழியைத் தொடவும் கூடப் பயம்.
இருட்டைக் கண்டால் குழந்தைகள் பயப்படுவதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். இருட்டில் பேய் உலவும் என்ற நம்பிக்கையை எவ்விதமோ ஊட்டி விட்டார்கள். மிகவும் சின்ன குழந்தைகளாக இருக்கும் போது ஏற்படும் அச்சம் வயது ஏற ஏற அதிகரித்த வண்ணம்தான் உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். இளமையில் ஏற்பட்ட அச்ச உணர்வுகளை அவர்களால் மறக்க முடியாதது காரணமாகலாம். இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதையாவது எண்ணி அச்ச உணர்வை அவர்களே வளர்த்துக்கொள்ள ஆரம்பித்து விடுவதும் ஒரு காரணமாகும்.

அச்சம் பற்றிய வீணான கற்பனைகள் தான் மூலகாரணம் என்றால் மிகையில்லை இளமையில் எப்படியோ ஏற்பட்ட அச்ச உணர்வுகள் மேலும் மேலும் வளர்ந்து பெருகவே அவர்களை நிலைகுலையச் செய்கின்றன எனலாம்.

அச்சம் பற்றி சிறிது ஆய்ந்து பார்த்தால் பெரும்பாலான அச்சங்களுக்குப் பெற்றோர்களே காரணமாக அமைகிறார்கள். பிள்ளைகளை வைத்து கொண்டு அதாவது அவர்கள் முன்னால் என்ன பேச வேண்டும்.என்பதைத் தெரியாமல் அவர்களுடைய உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி விடுகிறார்கள்; இதுதான் பெரும் தவறாக முடிந்து விடுகிறது. அவர்களின் வாழ்வைக் குலைத்து விடுகிறது எனலாம்.


மேலும் வாசிக்க

7/26/2011 by சம்பத்குமார் · 2

July 24, 2011

பண்புகளை வளர்த்தல்


உழைப்பு, நேர்மை போன்ற நற்பண்புகளை வலியுறுத்துங்கள். ”உழைப்பே உயர்வு தரும்.” ”உண்மையே பேசு”போன்ற மந்திரச் சொற்களை குழந்தைகளின் மனத்தில் ஆழப் பதியுங்கள்

உழைப்பில் நம்பிக்கை ஏற்பட்டல்தான் அவர்கள் படிப்பதற்க்கு அதிக நேரம் ஒதுக்குவார்கள் திரும்பத் திரும்பப் படித்து தெளிவு காண்பார்கள்
உண்மையில் நம்பிகை இருந்தால் தில்லுமுல்லு செய்யாமல் தேர்வுகளை நேர்மையாக எழுதுவார்கள் .

சில பண்புகள் மரபு வழியி்ல் வரும். சில பண்புகள் சமூகத்தில் பழகும்போது வளர்த்துக் கொள்ளப்படும் .
பண்புகளைக் கொண்டே மனிதர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்

மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 2

சின்ன ஆசை … பெரிய மகிழ்ச்சி


கண்ணன் சிரிப்பினிலே
பட்ட மரம் தளிர்க்கும்”
என்பார் கவிஞர்.
குழந்தை சிரிக்கும்போது நம் இதயம் சிலிர்க்கிறது.பெரிய மனிதர்களின் சிரிப்பில் உள்ள கள்ளமோ போலித்தனமோ குழந்தையின் சிரிப்பில் கிடையாது. அது இயல்பானது. குழந்தை போலவே ரொம்ப ஃப்ரஷ்
அவர்களிடம் இந்த சிரிப்பு என்றும் நிலைக்க நீங்கள் ஆசைப்படுவீர்கள்தானே?

குழந்தையின் உலகம் வண்ணமயமானது. அங்கே பூக்களுக்கும் பறவைகளுக்கும், தேவதைகளுக்கும்தான் முதலிடம். ஒரு சின்னப் பூவின் மலர்ச்சியில், சிட்டுக்குருவியின் ‘குக்கூ’வில்  அவர்கள் ஆனந்திக்கிறார்கள். பாடம் பண்ணப்பட்ட மயிலிறகும், இலைகளும் அவர்களின் பொக்கிசம். டோராவுடன் ஆடிப்பாடினாலே போதும்.

அவர்கள் ரொம்பவும் சின்னச் சின்ன ஆசைகளில் மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். கடலோரக் கிளிங்சலும் கூழாங்கற்களும் கூட அவர்களைத் திருப்திப்படுத்திவிடும்.
குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்களுடைய குழந்தைத்தனம் உலகச்சந்தடியில் தொலைந்து போய்விடக்கூடாது.மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 0

கொடுங்கள்....பெறுங்கள்


பையன் ரொம்பச் சின்னவன்தானே என்று நீங்கள் அலட்சிய்ப்படுத்திவிட கூடாது. உங்களிடம் உள்ள சுய மரியாதை தன்னுணர்வு எல்லாம் அவனுக்கு உண்டு.

நீங்கள் சிரித்தால் சிரிப்பான். முறைத்தால் பதிலுக்கு அவனும் முறைப்பான். தான் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். தனக்கு உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று பெரிய ஆட்களைப் போல அவனும் நினைப்பான்.

குழந்தையிடமிருந்து அன்பையோ, மதிப்பையோ நீங்கள் அதிகாரமாய் கேட்டுப் பெற முடியாது. நீங்கள் குழந்தைக்குக் கொடுப்பதைத்தான் குழந்தையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

குழந்தை உங்களுடன் நட்புக்கொள்ளத் தயார். நீங்கள் தயாரக வேண்டும்.
"குழந்தைக்கு உங்கள் நட்பு தேவைப்படுகிறது .ஆனால், உங்களுக்கோ நேரம் தேவைப்படுகிறது”.

மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 0

நிதானப் போக்கைக் கடைப்பிடியுங்கள்

பிள்ளைகள் தங்களுடைய பேசும் முறையை நடந்து கொள்ளும் முறையை பெற்றோர்களிடமிருந்தே கண்டு பிடிக்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். நீங்கள் ‘தயவு செய்து’ ‘நன்றி’ போன்ற பாங்கான சொற்களை அடிக்கடிப் பயன்படித்தினால் உங்கள் குழந்தைகளும் அப்படியே சொல்லிப் பழகுவர்.

சில நேரங்களில் நீங்கள் நிதானம் இழந்து கத்துவீர்கள். உங்கள் எதிரில் இருப்பவர் நிதானமாகவே நடந்து கொள்வார். அதுதான் சரியான நடத்தை என்பதை அறிவார் அவர்.
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் விவாதிக்க முற்படுகிறபோது நீங்கள் என்ன செய்வீர்கள்.உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்?
உங்கள்  குரலை உயர்த்தாமல். அவர்கள் சொல்வதைக் கேட்டபடி அமைதியாயிருப்பீர்களா?

பிள்ளைகளிடம் நீங்கள்   தொடர்ந்து கூச்சல் போட்டால் மற்றும் கோபவசப்பட்டால் உங்கள் பிள்ளைகளும் ஒருநேரம் கோபமாய் எதிர்வினை புரிவார்கள். உண்மையில் அவர்கள்  இயல்பாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய கோபத்தை நீங்கள் தூண்டிவிடுகிறீர்கள்.
நீங்கள் சத்தம் போட்டு காரியம் சாதிக்கிறவராய் இருந்தால் எப்போதுமே அது பலனளிப்பதாயிருக்காது.

உங்கள் கோபத்தைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்த குழந்தைகள் ஓரு கட்டத்தில் உங்களையும் பொருட்படுத்தாமல் இருந்து விடுவார்கள். அப்போது இழப்பு உங்களுக்குத்தான். உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழந்து விட்டால் உங்களுடைய சிறப்பம்சங்களையும் நீங்கள் இழக்க நேரிடும்.
  

மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 0

தந்தையின் பங்கு


குழந்தை வளர்ப்பில் தாய் தந்தை  இருவருக்குமே பங்கு உண்டு.
பொறுப்பை தாயிடம் சாட்டிவிட்டு, தந்தை  அலட்சியமாக இருந்து விட முடியாது. சில பொறுப்புகளை தந்தைக்கே உரியவை எனலாம்.
தாயைப் போலவே தந்தையும் குழந்தையிடம் அன்பு காட்ட வேண்டும். அக்கறையாய் நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை பொருட் செல்வத்தோடு, கல்விச் செல்வத்தையும் அளிக்கிற கடமை தந்தையினுடையதுதன்.
தன் மகனை நல்லவனாக, வல்லவனாக, சான்றோனாக சிறந்து விளங்கச் செய்வதில் தந்தைக்கே முதன்மைப் பங்கு.
ஆண் குழந்தையிடம் போலவே  பெண் குழந்தையிடம் தந்தை ஆதரவாயிருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பொதுவாக தந்தையிடம்தான் (தாயை விடவும்) அதிகம் சார்ந்திருப்பார்கள்.
தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்யாத தந்தை அவர்களால் நேசிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதுமில்லை.

மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 0

குடும்பத்திலிருந்தே தொடங்குங்கள்


வீடு சிறிய உலகம்.
உலகம் பெரிய வீடு என்றே கூறலாம்.வெளியுலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை வீட்டிலிருந்தே கற்கிறோம். குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். சகல அறிவும் இங்கிருந்தே தொடங்கிறது.
மனிதர்களை நேசிக்கவும் நெருக்கடிகளைச் சமாளிக்கவும் நம் குடும்பத்தில் கற்றுக் கொள்கிறோம்.
பெற்றோர்கள் அளிக்கும் பயிற்சியைக் கொண்டே நாளைய மனிதர்கள் வெளியுலகை நோக்கி நடைபோடுகிறார்கள்.
உழைப்பு, ஒற்றுமை,அன்பு பகிர்ந்து கொள்ளல் இவற்றை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள். இதனை மனதில் கொள்ளுங்கள்.
அவர்களுடைய மகிழ்ச்சியும், வளர்ச்சியும் உங்களிடமிருந்தே தொடங்குகின்றன.

மேலும் வாசிக்க

7/24/2011 by சம்பத்குமார் · 0

July 21, 2011

திறமையுள்ள குழந்தைகள்


 • இயல்பிலேயே அதிநுட்ப உணர்வைப் பெற்றிருப்பர்.
 • உயர் அளவிலான ஆற்றல் கொண்டிருப்பர்
 • குறுகிய கால அவகாசத்தில் தேர்ச்சியடைவர்
 • அத்தனை பொறுமை இருக்காது.
 • கட்டுப்பாடு, நிர்ப்பந்தம் பிடிக்காது.
 • தோற்றத்திலேயே தன்னம்பிக்கை வெளிப்படும்.
 • ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்கிற துடிப்பு இருக்கும்.
 • மறுத்துப் பேசுவதில் தயக்கம் இருக்காது.
 • தங்களுக்கென்று ஒருமுறையைத் (கற்பதலும்,செயல்படுவதிலும்) தேர்ந்து கொண்டிருப்பார்கள்.
 • தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்வர்.

மேலும் வாசிக்க

7/21/2011 by சம்பத்குமார் · 0

July 20, 2011

சத்தான உணவுகள்

இன்று எந்த வகுப்பு படிக்கிற மாணவனும் நிறைய   புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது மற்றும் சுமக்க வேண்டியிருக்கிறது.

உடலுக்கும் சக்தி வேண்டும் .முளைக்கும் அதிக சக்தி வேண்டும்.  ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உண்பது அவசியம் .

மாணாவர்கள் பச்சைக் காய்கறிகளை, பால், தயிர், பழவகைளை, கொழுப்புச் சத்துக்கள், நிரம்பிய உணவுகளை மிகுதியாய் உண்ண வேண்டும். அப்போதுதான் படிப்பதற்கு தேவையான எரிசக்தி அவர்களுக்குக் கிடைக்கும்.
   
உங்கள் பிள்ளைகளின் அன்றாட உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன  என்பத்கவனியுங்கள் மருத்துவரின் ஆலேசனை உடன் ஒரு உணவுப் பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
படிப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகிற குழந்தைகள் சரிவிகித உணவை உண்டுதான் இழக்கும் சக்தியை உடனுக்குடன் ஈடுகட்ட முடியும். சத்தான உணவு புத்துணர்ச்சி தரும்.

மேலும் வாசிக்க

7/20/2011 by சம்பத்குமார் · 0

July 19, 2011

உங்கள் எதிர்பார்ப்புகள்


குழந்தைகளை வளர்ப்பதில் உங்களுக்கேற்பட்ட சிரமங்களை உங்கள் பிள்ளைகள் புரிந்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.


குழந்தைகள் நன்றியை எவ்வகையிலும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. உங்களை மதித்து நடந்தாலே போதும்.

உங்களிடம் அன்பு காட்ட வேண்டும்.நீங்கள் முதுமையுற்ற  நிலையில் ஆதரவாக இருக்க வேண்டும்.
-இவைதானே? இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறப்பெறும் பெற்றோர்கள் பாக்கியவான்கள்.

மேலும் வாசிக்க

7/19/2011 by சம்பத்குமார் · 1

;